மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச முகக்கவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2020 11:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் போது, முகக்கவசமின்றி வருவோருக்கு கோவில் சார்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஊரடங்கால் இக்கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தினமும் அம்மன், சுவாமிக்கு பூஜை, அபிேஷகம் நடக்கிறது.
அரசு அனுமதிக்குப்பின் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இணைகமிஷனர் செல்லத்துரை தலைமையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முகக்கவசமின்றி வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உடலின் வெப்பநிலையை பரிசோதித்த பின், தானியங்கி சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தரிசனத்திற்கு தடுப்பு கம்பிகளுக்கு இடையில் குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையில் நின்று செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி மூலம் கம்பி சுத்தப்படுத்தப்பட உள்ளது. காலணி, அலைபேசி பாதுகாக்கும் இடத்தில் உள்ள ஊழியர்களுக்கு முகத்தை முழுமையாக மறைக்கும் கவசம் வழங்கப்பட உள்ளது.