புதுச்சேரி : பள்ளி வாசல்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகின்றதா என வக்பு வாரிய செயலர் திடீர் ஆய்வு நடத்தினார். புதுச்சேரியில் கடந்த 8ம் தேதி மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. பள்ளி வாசல்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என வக்பு வாரிய செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சீனியர் எஸ்.பி.,ராகுல் அல்வால் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நேரடியாக ஆய்வு செய்தனர். புதுச்சேரி அண்ணசாலை, நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி, சுல்தான் பேட்டை, லாஸ்பேட்டை, முல்லா வீதிகளில் உள்ள பள்ளி வாசல்களை பார்வையிட்ட வக்பு வாரிய செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, அங்கிருந்த நிர்வாகிகளிடம், கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் வைக்க அறிவுறுத்தினர்.