பதிவு செய்த நாள்
15
ஜூன்
2020
11:06
நாகை : கோயில்களை உடனடியாக திறந்து மக்களிடத்தில் மன அமைதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டுமென தருமபுர ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் வலியுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர, மணி விழாவில் பங்கேற்ற தருமபுர ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசி லாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சிவஞான கொலுவில் எழுந்தருளச் செய்து ஆராதனை நடந்தது.
தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் கூறுகையில்: மாநில அரசு நிர்வாகத்திற்கு முதல்வர் என்று ஒருவர் இருந்தால் தான் மக்கள் பிரச்சினைகளை கூறுவார்கள். தீர்வு காண முடியும். அதுபோல் கோயில்கள் திறந்தால் தான் மக்கள் தங்கள் தேவைகளுக்கு இறைவனை நாடுவர். மன நிம்மதியை பெறுவர். வழிபாட்டுத்தலங்களை மத்திய அரசு ஜூன் 8ம்தேதி முதல் திறக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு சமயத்தலை வர்களை அழைத்து கருத்து கேட்பதாக கூறி கோயில்களை நிர்வகிக்க கூடிய ஆதீனங்கள், ஜீயர்களை அழைக்காமல் ஆலோசித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது. ஊரடங்கு தளர்வு என்று அனைத்தையும் திறந்துவிட்டு மக்களின் வழிபாட்டுக்குரிய கோயிலை மட்டும் திறக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது. இறைவழிபாடு தான் மக்களை பிரச்சனைகளிலிருந்து காக்கும்.எமதர்மனுக்கு தட்சிணாயனம், உத்தராயனம் என இரண்டு கோரப் பற்கள் உண்டு. உத்திராயண காலத்தில் வெப்பம் அதிகமாகி அம்மை போன்ற தொற்றுநோய் ஏற்படும். தட் சிணாயன காலத்தில் மழை மற்றும் குளிர்ச்சி ஏற்பட்டு சீதபேதி, காய்ச்சல் உள்ளிட்டவைகள் பரவும். இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு கோயில்களுக்குச்சென்று இறை வழிபாடு செய்வது அவசியம்.கோயில்களை திறக்க மத்திய அரசு உத்தரவிட்ட பிறப்பித்தும் தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறக்காமல் காலம் தாழ்த்துவது தேவையற்ற செயலா கவே கருதவேண்டியுள்ளது. கோயிலுக்கு வரக்கூடியவர்கள் குளித்துவிட்டு தூய்மையாகதான் வருவார்கள். பல கோயில்களில் தினமும் 100பேருக்கு அன்னதானம் கிடைத்தது. கோயில் கள் திறக்காததால் அன்னதானமும் தடைப்பட்டுள்ளது. பல கிராம கோயில்கள், கிராம தேவதை வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய பிரச்சனையினால் பூஜைகள் தடைபட்டு சுவாமி க்கு நைவேத்தியம் செய்வதே சிரமமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனவே உடனடியாக அனைத்து கோயில்களையும் தமிழக அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயி ல்களில் தொடர்ந்து பூஜைசெய்யவும், பக்தர்கள் வழிபட தடை ஏற்பட்டதற்கு நிவர்த்தியாக அனைத்து கோயில்களிலும் சாந்தி பரிகார பூஜை செய்வது அவசியம் என்றார்.
கோயில்களை திறக்க வேண்டும்: தருமபுர ஆதீனம் தொடர்ந்து திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் கூறுகையில்: கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது பழமொழி. அத்தகைய முக்கியத்துவம் பெற்ற ஊர் மத்தியில் அமையப்பெற்ற கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியாமல் த டுப்பது அவசியமற்றது. இந்து சமய அறநிலைத் துறை ஆதீனங்கள் முதன்மை பொறுப்பு வைக்கக்கூடிய தமிழக அரசின் உயர்நிலைக் குழுவை நடத்தாமல் இருப்பது வியப்பாக உள்ளது. சமயத்துறையில் தேவையற்ற உத்தரவுகளை அரசு பிறப்பிக்க அதிகாரம் கிடையாது.கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணத்திற்காக வேண்டுமானால் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கோயில்களில் வழிபட செய்யலாம். அதை விடுத்து தொடர்ந்து கோயில்களை இப்படி பூட்டி வைப்பது வேதனையானது என்றார்.