* உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே மிக வலிமை மிக்கதுது. * கடவுளுக்கு நன்றியுடன் உணவை அர்ப்பணித்த பின் உண்ணுங்கள். * எந்த பணியில் ஈடுபட்டாலும் ஆழ்மனம் கடவுள் சிந்திக்கட்டும். * உடற்பயிற்சி, யோகாசனம், நடைப்பயிற்சி ஏதாவது ஒன்றில் தினமும் ஈடுபடுங்கள். * எல்லா உயிர்களிடமும், சக மனிதர்களிடமும் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். * தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தைக் கடைபிடியுங்கள். * கோபத்தை கட்டுப்படுத்தி சகிப்புத்தன்மையுடன் வாழப் பழகுங்கள். * சுற்றியுள்ள மனிதர்கள், சூழ்நிலையுடன் ஒத்துப் போக முயலுங்கள். * அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கடவுளைச் சரணடையுங்கள். * குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டு வழிபாட்டில் ஈடுபடுங்கள். * ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த மனதுடன் செயல்படுங்கள். * வருமானத்தில் இரண்டு சதவீதமாவது தர்மம் செய்யுங்கள். * வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் செல்லுங்கள். * தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்தவர்கள். * கடவுளை நம்பினால் நன்மை கிடைப்பது நமக்குத் தான். * கடவுளைப் பற்றி பேசுவது அல்ல ஆன்மிகம். அவரில் வாழ்வதாகும். * குற்றங்களை எடுத்துக்காட்டும் மனிதர்களிடம் நன்றி பாராட்டுங்கள். * உடலுக்கு உணவு போல உயிருக்கு வழிபாடும், தியானமும் அவசியம். * மன அமைதியை கொண்டவர்களிடம் மட்டுமே மகிழ்ச்சி குடியிருக்கும். * பணிவும், எளிய வாழ்வும் கொண்டவர்களிடம் தெய்வத்தன்மை வெளிப்படும். * செயலும் அதற்கான விளைவும் சமமாக இருக்கும். எனவே யாருக்கும் தீங்கு செய்யாதீர். . * கடவுள் உங்களை எந்த நிலையில் வைத்தாலும் கவலைப்படாதீர்கள். * கடவுளைக் குறை கூறாதீர்கள். உங்களுக்கு நல்லது எது? தீயது எது? என அறிந்தவர் அவர் ஒருவரே. * பெயர், புகழ், பணம் எனும் மாய ஆசைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். * இரக்கம், அடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, கற்பு, தவம் ஆகியவை ஆன்மிக வாழ்வின் முதுகெலும்புகள். - சிவானந்தர்