மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பாக திருவருட்பிரகாச வள்ளலார் தலைமையில் வைத்தீஸ்வரர் பாலாம்பிகை பூஜை நடந்தது.சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார். கொரோனா வைரஸ் நீங்கவும், ஆரோக்கிய நலன்கள் உண்டாகவும் ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், சவுந்தர்யலகரி, சிகாமணி மாலை, தேவார பதிகங்கள் பாடப்பட்டன.