திருச்செங்கோடு: கொரோனா தொற்று காரணமாக, மின்துறை அமைச்சர் தங்கமணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற வேண்டி, திருச்செங்கோடு அடுத்த, எலச்சிபாளையம் ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சுந்தரம், மாவட்ட துணைச்செயலாளர் இன்பதமிழரசி, எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டுவேல்,மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட வர்த்தக அணிச்செயலாளர் சக்திவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் பரணிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.