Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ரத்து ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமபிரானுடன் தொடர்புடைய பசுமை ராமாயண பூங்கா
எழுத்தின் அளவு:
ராமபிரானுடன் தொடர்புடைய பசுமை ராமாயண பூங்கா

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
01:07

டேராடூன் : கடவுளாக வழிபடப்படும், ராமருடன் தொடர்புடைய தாவரங்கள் மட்டும் உள்ள, பசுமை ராமாயண பூங்காவை, உத்தரகண்ட் வனத்துறை உருவாக்கியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில வனத்துறை சார்பில், ஹல்த்வானியில், 18 ஏக்கர் பரப்பளவில், பல்லுயிர் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில், மதம் மற்றும் ஆன்மிகம், அறிவியல், ஆரோக்கியம், அழகியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், தாவரங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. மதம் மற்றும் ஆன்மிகம் பிரிவில், பகவான் ராமருடன் தொடர்புடைய தாவரங்கள் வளர்க்கப்பட்டு, ராமாயண பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநில தலைமை வன பாதுகாவலர் சஞ்சீவ் சதுர்வேதி கூறியதாவது: பகவான் ராமருடன் தொடர்புடைய தாவர இனங்களை கண்டறிய, பல்வேறு இலக்கியங்களையும், மத நுால்களையும் ஆராய்ந்தோம். இதில், அனைத்து தகவல்களும், வால்மீகி ராமாயணத்தில் உள்ளன.ராமர், அயோத்தியிலிருந்து இலங்கைக்கு பயணித்த போது, நான்கு வகை வனப்பகுதிகளை கடந்துள்ளார். மற்றொரு வனப்பகுதி சீதையுடனும், இன்னொன்று, ஹனுமானுடனும் தொடர்புடையதாக இருந்தது.இந்த ஆறு வனப்பகுதிகளிலும் இருந்து, 30 வகை தாவரங்களை தேர்வு செய்து, அவற்றின் தாவரவியல் பெயர்களை கண்டறிந்தோம்.

அவற்றை, ஹல்த்வானியில் உள்ள பசுமை ராமாயண பூங்காவில், 1 ஏக்கர் பரப்பில் வளர்த்துள்ளோம். இது, நாட்டின் முதல் பசுமை ராமாயண பூங்காவாக உருவாகியுள்ளது. இங்குள்ள தாவரங்களில், அவற்றின் தாவரவியல் பெயர்களுடன், ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சமஸ்கிருத பெயர்களையும், மக்கள் அறியும் வகையில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar