பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
11:07
மேட்டூர்: தட்சிணாயன புண்யகால தொடக்க நாளில், போதிய அளவில் பக்தர்கள் இல்லாததால், மேட்டூரில் காவிரி படித்துறைகள் வெறிச்சோடின. தட்சிணாயன புண்யகால தொடக்க நாளான ஆடி, 1ல், புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியாற்றில், பக்தர்கள் புனித நீராடுவர். குறிப்பாக, சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, திரளான பக்தர்கள் மேட்டூர் வந்து, காவிரியில் புனித நீராடுவர். தலை ஆடி என்பதால், புதுமண தம்பதியர் நீராடி வழிபடுவர். நடப்பாண்டு, கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளதால், நேற்று, மேட்டூர் காவிரியாற்றுக்கு குறைந்த பக்தர்களே வந்தனர். வழக்கத்தை விட, புதுமண தம்பதியரும் ஓரிருவரே ஆங்காங்கே தென்பட்டனர். உள்ளூர் பக்தர்கள் மட்டும், காவிரியில் நீராடி, மேட்டூர் அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.