பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
10:07
திருப்பூர்: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருப்பூர், பாளையக்காடு சக்தி மாரியம்மன் வராகி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் மாதங்களில், ஆடி மாதம், சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி பவுர்ணமி, ஆடி தபசு என பல்வேறு விசேஷ நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த மாதத்தில், நாகர் வழிபாடு, அம்பாள் வழிபாடு, மாங்கல்ய விரதம், மங்கல கவுரி விரதம் உள்ளிட்ட வழிபாடுகள் பெருமளவு பின்பற்றப்படும். நேற்று, ஆடி மாத பிறப்பு, கிருத்திகை நட்சத்திரத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால், கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், நகர, கிராமங்களில் வசிக்கும் பக்தர்கள், தங்கள் பகுதியில் உள்ள கோவில்களில், வழிபாடு செய்தனர். பலரும், தங்கள் வீடுகளிலேயே பூஜை செய்து வழிபட்டனர். இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இம்மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமையும், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடக்கும். தற்போது, வாய்ப்பில்லை என்பதால், வீடுகளில் எளிமையாக ஆடி பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.