ஒருநாள் ஸெய்யதுனா ஈஸாவிடம் சீடர் ஒருவர், ‘‘எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறீர்களே...வாகனத்தில் ஏறி சென்றால் நன்றாக இருக்குமே’’ எனக் கேட்டார். ‘‘என்னிடம் வாகனம் வாங்க பணம் இல்லையே’’ என்றார் ெஸய்யதுனா. ஒரு கழுதையை விலைக்கு வாங்கி அன்பளிப்பாக கொடுத்தார் சீடர். அதிலே ஏறி சென்ற ெஸய்யதுனா தன் பணிகளில் ஈடுபட்டார். இரவானதும் கழுதைக்கு தீனி போடுவது பற்றிய கவலை அவருக்கு ஏற்பட்டது. சீடரை அழைத்து கழுதையை ஒப்படைத்து, ‘‘என்னுடைய கவனத்தை இறைவனை விட்டு திருப்பக்கூடிய எதுவும் எனக்கு வேண்டாம்’’ எனத் தெரிவித்தார்.