பக்தர்களை சிவபெருமான் ஆட்கொண்டதாகச் சொல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2020 05:07
அடியவர்களை வழிநடத்தி காப்பது ஆட்கொள்ளுதல். ஒரு விஷயத்தை சரியென்று கருதி ஈடுபடும்போது அதை வேண்டாம் என தடுத்துக் காப்பதை ‘தடுத்தாட்கொள்ளுதல்’ என்பர். பசியால் அழுத திருஞானசம்பந்தருக்கு பாலுாட்டி சிவன் ஆட்கொண்டார். சுந்தரரின் திருமணத்தின் போது முதியவர் வேடத்தில் வந்து ‘இவன் எனது அடிமை’ என ஓலையைக் காட்டி தடுத்தாட்கொண்டார்.