* போதும் என்ற திருப்திக்கு நிகரான செல்வம் ஏதுமில்லை. * அன்பு இல்லாதவன் கடவுளை ஒருபோதும் உணர முடியாது. * நம்பிக்கை இருந்தால் திட்டமிட்டபடி முயற்சியில் வெற்றி கிடைக்கும். * துன்பம் நேரும்போது கடவுளைச் சரணடைந்தால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். * பக்தி இருந்தால் முடியாததையும் சாதிக்கும் வலிமை உண்டாகும். * பகலும், இரவும் சேரும் நேரமே வழிபாட்டிற்கு உகந்த நேரம். * பெண்கள் கோபம் கொள்ளாமல் பொறுமை காப்பது அவசியம். * மனம் கடவுளிடம் ஒன்றி விட்டால் உலகில் எல்லாம் கைகூடும். * நற்செயல்களில் ஈடுபட்டால் பாவ மூட்டை குறையத் தொடங்கும். * ஆசையில் இருந்து விடுபட்டால் பிறவி சக்கரத்திலிருந்து விடுதலை கிடைக்கும். * பிறர் மீது குற்றம் சொல்லத் தொடங்கினால் அதுவே உங்களின் இயல்பாகிவிடும். * மகானுக்கு மரணம் என்பது வெறும் விளையாட்டு போன்றது தான். * ஒருபோதும் வேலையின்றி சும்மா இருப்பது கூடாது. * ஆன்மிக சாதனை மூலம் கர்மவினைகள் அறுபடும். * சரியான தருணத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன். * துன்பம் என்பது கடவுள் அளித்த வரப்பிரசாதமே. அதுவும் கருணையின் வெளிப்பாடே. * உலகியல் நாட்டம் கொண்ட மனிதனை பணவிஷயத்தில் நம்ப முடியாது.