ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி தஞ்சை கலெக்டருடன் சந்திப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2020 04:07
தஞ்சாவூர், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஸ்தாபனமாக தஞ்சையில் ராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் அருகே சிவாஜி நகரில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக புதிதாக ராமகிருஷ்ண மடம் கிளை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்த ஏதுவாக புதிதாகக் கோயில் திருப்பணி செய்து அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் சிறப்பு பூஜைகள் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று நடக்க இருக்கிறது. அதற்கு அழைப்பு விடுக்க தஞ்சை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், தஞ்சை கலெக்டர் கோவிந்தராவை சந்தித்துப் பேசினார். அப்போது கரோனா ஊரடங்கு காலத்தில் தேவையான பகுதிகளுக்கு ஏழை, எளிய மக்களுக்கு ராமகிருஷ்ண மடம் மற்றும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட சேவைப் பணிகள் குறித்தும் கலந்துரையாடினர். ராமகிருஷ்ண மடம் பிஆர்ஓ ஸ்ரீமத் சுவாமி நரவரானந்த மகராஜ் உடனிருந்தார்.