பதிவு செய்த நாள்
30
ஜூலை
2020
04:07
வரலட்சுமி விரதமிருக்க பின்வரும் பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி அல்லது பசுஞ்சாணம், வாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், பூக்கள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், பத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், குத்துவிளக்கு, விளக்குத்திரி, நல்லெண்ணெய், தாம்பாளம், பஞ்ச பாத்திரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, மணி, தீப்பெட்டி. நைவேத்யம் செய்ய சர்க்கரை பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை.