நாக தோஷத்தால் குழந்தை இல்லாதவர்கள் திங்கள் கிழமையில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர், நாகர் சிலைகளை ஏழுமுறை சுற்றி வந்து வழிபடுவர். நாகர் சிலையில் இரு பாம்புகள் இணைந்த நிலையில், நடுவில் ஒரு சிவலிங்கம் இருக்கும். இந்த இரு பாம்புகளும் கணவன், மனைவியைக் குறிக்கும். கணவனும், மனைவியும் இணைந்து சிவலிங்கத்தை தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தைப் பேறு வேண்டியும், நாக தோஷம் நீங்கவும் அரச மரத்தடியில் இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்வதும் உண்டு.