பதிவு செய்த நாள்
06
ஆக
2020
12:08
தேனி,: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடந்ததையொட்டி தேனியில் ஹிந்து அமைப்புகள் சிறப்பு வழிபாடு செய்து மகாதீபம் ஏற்றி வழிபட்டனர்.அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை சிறக்க தேனி ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயிலில் சிறப்பு நிகழ்வு நடந்தது.
நிறுவன தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ், பொருளாளர் செந்தில்குமார், அமைப்பாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ராமர் படம் முன் சமூக இடைவெளியை பின்பற்ற ராமமந்திரம் உச்சரித்தனர். தொழிலதிபர் கதிரேசன் மகாதீபம் ஏற்றினார். சிறப்பு அபிேஷகம் நடந்தது.
*தேனியில் பா.ஜ., அலுவலகம் முன் நகர தலைவர் விஜயகுமார் தலைமையில் பொது செயலாளர் மலைச்சாமி விளக்கேற்றினார். மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜன், மகளிர் அணி தலைவர் சுஜாதா, நகர துணை தலைவர் மீனா பங்கேற்றனர். ராமநாமம் கூறி சிறப்பு பூஜை நடந்தது.
ஆண்டிபட்டி:கதிரியக்கவுண்டன்பட்டி வரதராஜபெருமாள் கோயிலில் நடந்த வழிபாட்டிற்கு ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். செயற்குழு மொக்கராஜ் முன்னிலை வகித்தார். ராமர் பட்டாபிேஷக படத்திற்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்தனர். ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், தலைவர் கண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ்குமார், பொறுப்பாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வீடுகளில் விளக்கு ஏற்றி ராம நாமம் கூற பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூடலுார்: கூடலுார் பா.ஜ., சார்பில் நகரத்தலைவர் வாசகர் தலைமையில் வீட்டிற்கு முன் செங்கல் வைத்து விளக்கு ஏற்றி பூஜை நடத்தினர். நகர பொதுச்செயலாளர் ராஜா, இளைஞர் அணி தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் ராஜா, நிர்வாகிகள் கணேசன், ராமமூர்த்தி, ராஜகோபால், சிக்கையன், நாகப்பன், பெத்தனராஜ், சிவமுருகன் கலந்து கொண்டனர். பூஜை நடத்தப்பட்ட 3 செங்கல்லை கூரியர் தபால் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர்வீடுகளில் விளக்கேற்றி 108முறை ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெயராம் எனக் கூறினர்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பா.ஜ., சார்பில் மெயின் பஜாரில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நகர் பா.ஜ., தலைவர் தெய்வம் தலைமை வகித்தார். ராமர் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மோடிகார்த்தி, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நாகவேல், நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.