அருப்புக்கோட்டை: பக்தி இருந்தால் சுபிட்சமாகலாம், என, சிருங்கேரி பீடாதிபதி பாரதீதீர்த்த மகா சுவாமிகள் அருளுரை வழங்கினார். அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் வளாகத்தில் பக்தர்களுக்கு தரிŒனம் öŒ#த அவர் தனது அருளுரையில், மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை இல்லாதவன் நாஸ்திகன், நம்பிக்கை உள்ளவன் ஆஸ்திகன். ஆஸ்திகன் கடவுளை நினைத்து கொண்டே இருப்பான். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பிராணிகள் போல இருப்பான். மனிதனாக இருப்பவன் நெறிமுறைகளோடு வாழ வேண்டும். வாழ்க்கையில் தர்மத்தை கடை பிடித்து வாழ வேண்டும். இல்லாவிடில் அவன் பிராணிகளுக்கு ஒப்பானவன். ஒரு மனிதன் பணக்காரனாகவும், புத்திசாலியாகவும், திறமையானவனாகவும் இருக்கலாம். இவை மட்டும் இருந்தால் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. கடவுள் பக்தி கூட இருந்தால் அனைத்து காரியங்களும் சுபிட்சமாக நடக்கும். இறைவனுக்கு எல்லாருமே ஒன்று தான் . மனிதனுக்கு துன்பம் வந்தால் கடவுள் இடத்தில் தான் போக வேண்டும். கடவுளுக்கு தன் அவனுடைய கஷ்டங்களை போக்கும் வல்லமை உண்டு , என்றார். சுவாமிகளுக்கு பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. தூளிபாத பூஜை. மகா சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம், வேத கோஷம் நடைபெற்றது. சுவாமிகளால் சாரதா சந்திரமெலீஸ்வர பூஜை நடத்தப்பட்டது. ஜெயவிலாஸ் அதிபர் டி.ஆர். தினகரன், ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.