இருக்கன்குடி: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இந்நிலையில் திருவிழா நடத்த அரசு தடை விதித்துள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடை பெறுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அன்றைய தினம் அம்மன் வீதியுலா நடைபெறாது என்றும். உற்சவர் கோவில் அம்மன், மற்றும் கோவிலில் உள்ள அம்மனுக்கு அன்றய தினம் மதியம் 12:00 மணி முதல் 2:00 வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படும். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி அம்மனை தரிசிக்க வசதியாக அபிஷேகம், மற்றும் பூஜையை ஆன் லைன் வாயிலாக நேரிடையாக ஒளிபரப்பு செய்வது என்று இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலர் மற்றும் இணை ஆணையர் அறிவுறுத்தல் படி பரம்பரை அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி வரும் ஆக.14ம் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அபிஷேக பூஜைகள் www.tnhrce.gov.in மற்றும் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பபடுகிறது. என கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கருணாகரன் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.