பதிவு செய்த நாள்
09
ஆக
2020
03:08
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி கோவில் வளாகத்தில் விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் வீரவேல் வெற்றிவேல் கொண்டு, வலம் வந்து வீரகுமார சுவாமியை வணங்கினார். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலை சுற்றி வலம் வந்து முன்நின்று வணங்கினார். மாநில பஜ்ரங்க் அமைப்பாளர் பரத், மாவட்ட தலைவர் ராஜகோபால், மாவட்ட இணைச் செயலாளர் சரவணன், மாவட்ட கோரக் க்ஷா பிரமுகர் சந்திரசேகர் உட்பட பா.ஜ.க.,வினர், இந்து முன்னணியினர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஸ்வ இந்து பரிசத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் ஆன்மீக உரையில் பேசியதாவது: முருகக்கடவுளின் மகத்துவம் குறித்தும் கந்தசஷ்டி கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார், இன்று மாலை 6 மணி அளவில் இந்துக்கள் அனைவரும் தங்களது பூஜை அறையின் முன்பு வீரவேல்,,வெற்றிவேல் வரைந்து, தீபம் ஏற்றி, கந்தர் சஷ்டிக் கவசம் படித்து தமிழ் கடவுள், இந்து கடவுளான முருகக்கடவுளை பூஜை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேச ஒற்றுமை, இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.