சிவகங்கை: கிராமப்புறங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணர் அவதரித்த தினமான கோகுலாஷ்டமி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மானாகுடி கிராமத்தில் பாமா ருக்மணி சமேத கோகுலகிருஷ்ணர் கோயிலில் காலையில் யாக வேள்வி பூஜை, கோ பூஜை நடந்தது. பின் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், பாமா, ருக்மணி வேடங்கள் அணிந்து பெற்றோர் கொண்டாடினர். கிராமப்புறங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.