மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளதாவது: இக் கோயிலில் ஆக.,15 முதல் செப் .,1வரை ஆவணி மூலத்திருவிழா நடக்க விருந்தது.
கொரோனா பரவல் காரணமாக கோயிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டுக்கு தடை உள்ளதாலும், திருவிழா லீலைகள் ஒன்றுக்கொன்று தொடர் புடையதாக உள்ளதாலும், ஒரு லீலையை விட்டு மற்றொரு லீலையை நடத்த முடியாத காரணத்தாலும் இத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருவிழா நாட்க ளில் சுவாமி சன்னதி சேத்தி பீடத்தில் அம்மன், சுவாமிக்கு பஞ்ச உபசார தீபாராதனை தினமும் காலை, மாலை இரு வேளையும் நடக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.