பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
தர்ம சிந்தனை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
மாத முற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்கும். புதனால் ஆக.29 வரையும், கேது, சுக்கிரனால் ஆக.31 வரையும் நற்பலன் கிடைக்கும். சூரியன், சனி மாதம் முழுவதும் நன்மை தருவர். இதனால் இம்மாதம் சிறப்பானதாக அமையும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளதார வளம் குறையாது. சமூக அந்தஸ்து உயரும். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும். சனிபகவானால் முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
ராகு செப்.1ல் 8ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உறவினர் வகையில் பிரச்னைகள் உருவாகலாம். சிறுசிறு தடைகள் குறுக்கிடலாம். கேது ராசிக்கு 3ம் இடமான தனுசு ராசியில் இருந்து பல நன்மை தந்து கொண்டிருந்தார். தெய்வ அருள், பொருளாதார வளத்தை தந்து கொண்டிருந்தார். அவர் செப்.1ல் இடம்மாறி 2ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். வீட்டில் பொருள் திருட்டு போகவும் வாய்ப்புண்டு.
குடும்பத்தில் பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் நன்மை கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சகோதரர்களால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். ஆக.29க்கு பிறகு வீண்மனக்கசப்பு வரலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
உடல் உபாதையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களிடம் இருந்த சோர்வு அடியோடு மறையும். ஆக.29க்கு பிறகு உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
சிறப்பான பலன்கள்* தொழிலதிபர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் வளர்ச்சி பெறும். பங்கு வர்த்தகம் மூலம் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகத் தொடர்பான தொழில்கள் சிறந்து விளங்கும்.
* வியாபாரிகள் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* அரசு ஊழியர்கள் உன்னத பலனை அடைவர். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
* போலீஸ், ராணுவத்தினர் வேலையில் திருப்தி காண்பர். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கைகளை ஆக.31க்குள் கேட்டு பெறலாம்.
* தனியார் துறையினருக்கு வேலைப்பளு குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன் காணலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை ஆக.29க்குள் கேட்டு பெறலாம்.
* வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். மாத
முற்பகுதியில் புதிய பதவி தேடி வரும்.
பொதுநல சேவகர்களுக்கு புகழ் பாராட்டு வந்து சேரும்.
* கலைஞர்களுக்கு பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறையிருக்காது. பாசிப்பயறு, நெல், சோளம், எள், கொள்ளு, தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாகும். கால்நடை வளர்ப்பில் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம்.
* மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காணலாம்.
சுமாரான பலன்கள்* தொழிலதிபர்கள் ஆக.31க்கு பிறகு அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும்.
* தனியார் துறையினருக்கு ஆக.29க்கு பிறகு வீண்அலைச்சல் இருக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்
* ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும்.
* கலைஞர்களுக்கு ஆக.31க்கு பிறகு பகைவர் தொல்லை அதிகரிக்கும். சிலர் அவப்பெயருக்கு ஆளாகலாம்.
நல்ல நாள்: ஆக.17,18,19,20,23,24,25,28,29 செப். 4,5,6,7,8,13,14,15,16
கவன நாள்: செப்..9,10 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:1,3 நிறம்: சிவப்பு, கருப்பு
பரிகாரம்:* தேய்பிறை அஷ்டமியில் ராகு வழிபாடு
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்