பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
கள்ளம் கபடமற்ற கன்னி ராசி அன்பர்களே!
மாத பிற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்கும். சுக்கிரன் ஆக.31ல் இருந்து சுக்கிரனால் நன்மை கிடைக்கும். கேது செப்.1ல் .சாதகமான இடத்திற்கு வந்து நற்பலன் கொடுப்பார். மனதில் பக்தி எண்ணம் மேலிடும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். பண வரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும்.
ராகு 10ம் இடமான மிதுன ராசியில் இருந்து மனைவி வகையில் பிரச்னையும், திறமை, புகழில் பங்கத்தை ஏற்படுத்துவார். அவர் செப்.1ல் 9ம் இடமான ரிஷபத்திற்கு மாறுவதும் சிறப்பான இடம் என சொல்ல முடியாது. தடைகளை உருவாக்கலாம். கேதுவால் ஏற்பட்ட உடல் உபாதை, பிள்ளைகளால் தொல்லை முதலியன பிரச்னைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். அவர் செப்.1ல் 3-ம் இடமான விருச்சிகத்திற்கு வந்து நன்மை தருவார். கேதுவால் கடவுள் அருளும், பண உதவியும் கிடைக்கும். உடல் உபாதைகள் மறையும்.
குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். ஆக.29க்கு பிறகு புதனால் வீட்டில் பிரச்னை வரலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு சிறு பிரச்னை வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும்.
பெண்களுக்கு சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். ஆக.29க்கு பிறகு ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். கோயில் மற்றும் புண்ணிய தலங்களுக்கு செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் புதிய முயற்சியில் கால்பதிப்பர். லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.
* வியாபாரிகள் வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வர். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் ஆக.31க்கு பிறகு விடுபடுவர்.
* ஐ.டி., துறையினர் ஆக.31க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.31க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31க்கு பிறகு நற்பெயர் கிடைக்க பெறலாம். புகழ் வளர்முகமாகவே இருக்கும். பணப் புழக்கத்தில் இருப்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.
* கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனச் சோர்வும் ஆக.31 க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
* விவசாயிகள் பழவகைகள், கேழ்வரகு, கொள்ளு, சோளம் மூலம் அதிக வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் அதிகரிக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மாத முற்பகுதியில் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பிற்பகுதியில் எதிரிகளின் இடையூறு தலைதுாக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
* வியாபாரிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிரி தொல்லை தலைதூக்கும். வாடிக்கையாளரை தக்கவைக்க விடாமுயற்சி தேவைப்படும்.
* தரகு, கமிஷன் தொழிலில் சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். சிலர் குழப்பத்திற்கு ஆளாவர்.
* அரசு பணியாளர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். திடீர் இடமாற்றம் ஏற்படலாம். பணியில் பொறுமையும் நிதானமும் தேவை.
* மருத்துவர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் மன உளைச்சலுக்கு ஆளாவர்.
* வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளை ஏற்று நடத்தும் போது சற்று கவனம் தேவை.
* ஆசிரியர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* மாணவர்கள் சோர்வுக்கு ஆளாக நேரிடும். சிரத்தையுடன் படிப்பது அவசியம்.
நல்ல நாள்: ஆக.17,18,21,22,26,27, செப். 1,2,3,4,5,11,12,13,14,15.
கவன நாள்: செப்.6,7,8 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: வெள்ளை, சிவப்பு.
பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* புதன் கிழமையில் குலதெய்வ வழிபாடு
* சனிக்கிழமையில் அனுமனுக்கு விளக்கு