Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: போட்டியில் வெற்றி கும்பம்: பதவி உயரும் கும்பம்: பதவி உயரும்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம்: சொத்து யோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: சொத்து யோகம்

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
11:08

மனஉறுதியுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே!

புதன் ஆக. 29 வரை நற்பலன் கொடுப்பார். அவரால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.


 ராகு ஆக.31 வரை 6ம் இடமான மிதுன ராசியில் இருந்து பல நன்மைகளை தருவார். அவரால் உடல்நலம் பெருகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். அதன் பிறகு ராகு 5ம் இடமான ரிஷபத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் பல இன்னல், இடையூறுகளை தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம்.  குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை உருவாகலாம். அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். இதுவரை 12ம் இடமான தனுசு ராசியில் இருந்து பொருள் இழப்புக்கு ஆளாக்கிய அவர் செப்.3ல் 11ம் இடமான விருச்சிகத்திற்கு சென்று நன்மை அளிப்பார். உடல்நலத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். முயற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை அவர் கொடுப்பார். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

குடும்பத்தில் உங்கள் ஆற்றல் மேம்படும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். கணவர், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். ஆக.31க்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். பெண்கள் பொன், பொருள் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வேலையில் நிம்மதியும், திருப்தி கிடைக்கும். ஆக. 31க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்க்ள் வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உடல்நலம் பயணத்தின் போது சற்று கவனம் தேவை.பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் மற்றும் பொருள் விரயம் ஆக.31க்கு பிறகு மறையும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வலிமை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பர். எதிரிகள் தவிடு பொடியாகி விடுவர்.
*  தனியார் துறையினர் திருப்திகரமான சூழ்நிலையில் இருப்பர். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* மருத்துவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தினர் ஆக.31க்கு பிறகு எதிர்பாராத வகையில் நன்மை கிடைக்க பெறலாம். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அலைச்சல்,வேலைப்பளு குறையும்
*  அரசியல்வாதிகள் மாத பிற்பகுதியில் தலைமையின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பர்.
* விவசாயிகள் நெல், பயிறு வகைகள், உளுந்து, காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். ஆக. 31க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. கால்நடை வளர்ப்பில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
   
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஆக.31க்கு பிறகு தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரை சந்திக்கலாம் கவனம்.
* வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டியாளர்கள் வகையில் அவ்வப்போது தொந்தரவு வரலாம். அரசு வகையில் அனுகூலம் இல்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.
* அரசு பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். நட்பு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
* வக்கீல்கள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
* ஆசிரியர்கள் சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும்.
* பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனச்சோர்வும் ஆக.31க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
* மாணவர்கள் ஆக.29 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் தீயவர்களோடு சேர்ந்து கெட்டப் பெயர் எடுக்க வாய்ப்புண்டு.
   நல்ல நாள்: ஆக.17,18,23,24,25,26,27,30,31 செப்.4,5,11,12,13,14,15
  கவன நாள்: ஆக.19,20 செப்.16 சந்திராஷ்டமம்
  அதிர்ஷ்ட எண்: 4,6. நிறம்: பச்சை, சிவப்பு

பரிகாரம்:
* தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம்
* செவ்வாயன்று துர்கைக்கு செவ்வரளி மாலை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar