மனிதனுக்கு தேவையான நற்பண்பு எது எனக் கேட்டார் தோழர் ஒருவர். அதற்கு நாயகம் ‘‘ பசித்தவருக்கு உன்னால் முடிந்த உணவை தானம் கொடு. தெரிந்தவர், தெரியாதவர் யாராக இருந்தாலும் ஸலாம் சொல். இந்த இரண்டு நற்பண்புகளும் மனிதனுக்கு அவசியமானவை’’ என்றார். இதைக் கேட்ட மற்றவர்களும் பின்பற்றுவதாக தெரிவித்து மகிழ்ந்தனர்.