‘‘இறைவன் மீதும், மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் அண்டை வீட்டாருக்கு தொல்லை தர வேண்டாம். விருந்தாளிகளை கண்ணியப்படுத்தும் வகையில் கொடை வழங்குங்கள். நல்லதை மட்டுமே பேசுங்கள் இல்லையென்றால் அமைதியாக இருங்கள்’’ என நாயகம் ஒருமுறை அறிவுரை கூறினார். அதைக் கேட்ட ஒருவர், ‘‘விருந்தாளிக்கு கொடை வழங்க வேண்டும் என்கிறீர்களே...அது என்ன?’’ எனக் கேட்டார். ‘‘ விருந்தானது மூன்று நாட்கள் இருப்பது அவசியம். அதற்கு மேல் விருந்தினர்களுக்கு அளிக்கும் உணவும், உபசரிப்பும் செய்பவருக்கு கொடை அல்லது தர்மமாக அமையும்’’ எனத் தெரிவித்தார்.