வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2020 04:08
நாகப்பட்டினம் : உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையடுத்து, கொரோனா காரணமாகத் திருவிழாவின் எந்த நாளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று தேவாலயம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகமும் தடை விதித்துள்ளது.