குமுளி; கேரளாவில் ஓணம் பண்டிகை ஆரவாரம் இன்றி கொண்டாடப்பட்டு வருகிறது.கேரளாவில் ஓணம் பண்டிகை ஆக.31ல் கொண்டாடப்பட உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். ஆனால் கொரோனாவால் கேரளாவில் இம்முறை ஓணம் பண்டிகை களையிழந்துள்ளது. கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை. மெகாசைஸ் அத்தப்பூக்கோலம் போடவில்லை. கேரளாவில் கிடைக்கும் செம்பருத்தி, ரோஜா, டாலியா உள்ளிட்ட பூக்களை வைத்து வீடுகளில் மட்டும் சிறிய பூக்கோலம் போட்டு ஆரவாரம் இன்றி கொண்டாடுகிறார்கள். இதனால் தமிழக பூவியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கேரள வியாபாரிகள் வருகைஇந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் வாங்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று முதல் கேரள வியாபாரிகள் பூக்கள் வாங்கதமிழகம் வர துவங்கிஉயுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூ வியாபாரம் செய்யும் வகையில் ஆக.30ல் தமிழகத்தில் முழுஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.