மூளிப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2020 01:08
சிவகாசி: ஆமத்துார் அருகே மூளிப்பட்டி ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
அமைச்சரின் குலதெய்வ கோயிலான பழமை வாய்ந்த இக்கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா ஆக.24ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து யாகசாலை பூஜைகள், தவசிலிங்க சுவாமி, அய்யனார் பூர்ணகலா, புஷ்கலா மற்றும் பரிகார தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை 7:15 மணிக்கு தவசிலிங்க சுவாமி, அய்யனார் பூர்ணகலா, புஷ்கலா மற்றும் பரிவார கடவுள்களின் விமான கலசத்திற்கு புனிதநீரை ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு கும்ப மரியாதை செய்யப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.