கொரோனா அழிய வேண்டி லட்சுமி நாராயணனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2020 12:08
மேட்டுப்பாளையம்: உலக நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் அழிய வேண்டியும், சிறுமுகை அருகே லட்சுமி நாராயணன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
சிறுமுகையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில், ரங்கம்பாளையத்தில் யோகலட்சுமி சமேத லட்சுமி நாராயணன் கோவில் உள்ளது. இங்கு நேற்று உலக நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் அழிய வேண்டியும், சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தை அடுத்து, வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலில் புதிய நிலவு அமைக்க, நிலவு பூஜையும், அதைத்தொடர்ந்து சிறப்பு யாக பூஜையும் நடந்தது. கோவில் நிர்வாகி கிருஷ்ணன், மற்றும் ரங்க பிரியன், வெங்கட் பிரியன் ஆகியோர் சிறப்பு யாக பூஜைகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர்.