விருத்தாசலம் : ஆவணி இரண்டாம் வெள்ளியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலை ஏகநாயகர், வேடப்பர் கோவில்கள், பெரியார் நகர் விஜய விநாயகர், மாரியம்மன், சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன், தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.