ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை கஜலட்சுமி சன்னிதியில் எழுந்தருளிய கிருஷ்ணன், சத்தியபாமா, ருக்குமணி, தவழும் கண்ணன், விளையாட்டு கண்ணனுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகளை கவுதம்பட்டர் செய்தார். செயல் அலுவலர் இளங்கோவன், வேத பிரான் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ் , மணியம் கோபி பங்கேற்றனர்.