Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... மதுரை மீனாட்சி அம்மன் உப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் மாயமான சிலைகள் விபரம் அனுப்ப அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2020
02:09

தமிழக கோவில்களில், 1950௦ம் ஆண்டில் இருந்து, காணாமல் போன சிலைகள் குறித்த விபரங்களை தொகுத்து அனுப்பும்படி, அறநிலைய துறை அதிகாரி களுக்கு, அத்துறையின் கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ், 36 ஆயிரத்து, 600 கோவில்கள், 56 மடங்கள், 57 மடத்துடன் இணைந்த கோவில்கள், 1,721 அறக்கட்டளைகள், 17 சமண கோவில்கள் உள்ளன. தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், 4.3 லட்சம் சிலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில், பழமை வாய்ந்த கற்சிலைகள், ஐம்பொன் சிலைகளும் உண்டு. அவற்றில், முறையான பாதுகாப்பில்லாத, 400க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து, 1,300க்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

சிலைகள் மாயமானது குறித்து, காவல் துறையில் அளித்த புகாருக்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற, குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, சிலைகள் கணக்கெடுக்கும் பணி, 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போன சிலைகள், எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்பதை கண்டுபிடிப்பதில், 2016ல், அறநிலைய துறை கமிஷனராக இருந்த, வீரசண்முகமணி ஈடுபட்டார்.

போலி சிலைகளை வைத்து விட்டு, ஒரிஜினல் சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்தது. எனவே, கோவில்களில் உள்ள சிலைகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.அதன்பின், சிலை தடுப்பு பிரிவு போலீசார், தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பலனாக பல சிலைகள் கண்டறியப் பட்டன. மேலும், 830 கற்சிலைகள் காணாமல் போனதாகவும், நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், அறநிலையத்துறை கமிஷனராக பிரபாகர் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர், அனைத்து இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கோவில்களில் காணாமல் போன சிலைகளின் விபரங்களை, 1950ம் ஆண்டில் இருந்து தொகுத்து அனுப்புங்கள் என, உத்தரவிட்டுள்ளார்.இதன் வாயிலாக, கோவில்களில் காணாமல் போன சிலைகள் விவகாரம், மீண்டும் துாசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
-- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar