திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், புரட்டாசி சதுர்தசி திதியை முன்னிட்டு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் மூலமந்திரம், சிவபுராணம், தேவார திருவாசக பாராயணமும் தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு ருத்ர மகா அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆண்டிற்கு 6 தினங்கள் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும், அதில் முக்கிய தினமான புரட்டாசி சதுர்தசி தினத்தில் நடைபெறும் அபிஷேகம் சிறப்பு ஆகும்.