புரட்டாசி சனியில் பெருமாள் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்டோர் நுழைய தடை
பதிவு செய்த நாள்
02
அக் 2020 05:10
சேலம்: புரட்டாசி சனியில், பெருமாள் கோவில்களில், 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதியில்லை. இதுதொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறை, சேலம் இணை ஆணையர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மண்டலமான, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர்.
புரட்டாசி சனியில், வைணவ தலங்களில் கூட்டம் வருவது வழக்கம். நடப்பாண்டு விதிமுறைகளை பின்பற்றி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அதேநேரம், 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர், நோய் வாய்ப்பட்டோருக்கு அனுமதியில்லை. கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகளை அமைக்கக்கூடாது. கோவில்களுக்கு உபயமாக கால்நடைகளை வழங்கும் பக்தர்கள், கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள இடத்தில் நேரடியாக வழங்கி, உபய காணிக்கை ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். தனிநபர் யாரிடமும் கால்நடைகளை வழங்கவோ, கோவில் வளாகத்தில் விட்டுச்செல்லவோ கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
|