பதிவு செய்த நாள்
04
அக்
2020
04:10
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, பரந்தாம கிருஷ்ணர் கோவிலில், புதிதாக சிவன் சன்னதி அமைத்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சி, மொக்கையூரில், 35 ஆண்டு கால, பழமை வாய்ந்த பரந்தாம கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவனுக்கு தனியாக சன்னதி அமைத்து, சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், வாஸ்துசாந்தி பூஜை, தீபாராதனை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவை விளாங்குறிச்சி பகவதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் குருநாத சிவம், கணபதி மருதையாநகர் செல்வ சக்தி விநாயகர் கோவில் அர்ச்சகர் ரவிசங்கர் சிவம், சாய்பாபா காலனி விசுவநாத சர்மா ஆகியோர் யாக வேள்விகளை நடத்தினர். கோவில் கோபுர கலசத்துக்கும், பரந்தாம கிருஷ்ணர், சிவன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகி கருப்பண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.