திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், அவ்வையார் வழிபட்டு அகவல் பாடிய பெரியானைக் கணபதி வழிபாடு பிரசித்தி பெற்றது. கொரோனா உள்ளிட்ட பிணி நீங்கி உலகம் நன்மை பெற சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன், சிவாச்சாரியார்கள் வழிபாட்டுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சம்பத் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் குருநாத் தடுப்பு வழி முறைகளைப் பின்பற்றி பங்கேற்றனர்.