Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

புரட்டாசி சனியின் மகத்துவம் என்ன? புரட்டாசி சனியின் மகத்துவம் என்ன? செல்வவளம் தரும் வழிபாடு!
முதல் பக்கம் » துளிகள்
திருப்பதியை நினைத்தால் திருப்பம் வரும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
15:49

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய்  மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித்  திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் கார்எழில் அண்ணலே.

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்
கண்ணன்  செங்கனிவாய்க் கருமாணிக்கம்
தெண்ணி றைசுனை நீர்த்திரு வேங்கடத்து
எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத் தானுக்கு
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீதுஇல் சீர்த்திரு வேங்கடத் தானையே

வேங்கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்
தாங்கள்  தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்துஉறை வார்க்கு நமஎன்னல்
ஆஅங் கடமை அதுசுமந் தார்கட்கே.

சுமந்து மாமலர் நீர்சுடர் துாபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன்கொள் வீடுதரும் தடங் குன்றமே.

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை பொன்திரு வேங்கடம்
மொய்த்து சோலைமொய் பூந்தடந் தாள்வரே.

தாள்பரப்பி மண் தாவிய ஈசனை
நீள்பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.

 
மேலும் துளிகள் »
temple
சுப்ரபாதம் என்றாலே நினைவுக்கு வருவது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் தான். ... மேலும்
 
temple
 மகாவிஷ்ணுவின் அம்சமான இதை ‘அஸ்வத்த நாராயணர்’  என்று வழிபடுவர். அதிகாலையில் இதைச் சுற்ற உடல்நலம் ... மேலும்
 
temple
மலையைப் பொறுத்தது இது. திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றவே மூச்சு வாங்குகிறது. திருப்பரங்குன்றம் போல ... மேலும்
 
temple
சிவபெருமானே அடியெடுத்துக் கொடுக்க திருமுறை பாடல்களை பாடிய நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்களை ‘பாடல் ... மேலும்
 
temple
இல்லை. நவக்கிரகங்களில் ஒருவர் குருபகவான். சிவபெருமானின் இன்னொரு வடிவம் தட்சிணாமூர்த்தி. குரு தோஷம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.