திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, கோவையில் உள்ள தனியார் மில் நிறுவனம் சார்பில், புதிதாக லட்சுமி என்ற யானை வழங்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக உறையூர், கமலவல்லி நாச்சியார் கோவில் திகழ்கிறது. இரண்டு கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் கோவில் கைங்கர்ய நிகழ்வுகளில், ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் பங்கேற்று வருகிறது. ஆண்டாளுடன் இணைந்து, ஸ்ரீரங்கம் ரெ ங்கநாதருக்கு கைங்கர்யம் செய்வதற்காக, நேற்று, 20 வயதுடைய பெண் யானை வழங்கப்பட்டது. பிரேமி என்ற பெயருடன் கேரளாவில் வளர்க்கப்பட்ட யானையை , கோவையில் உள்ள தனியார் மில் நிர்வாகத்தினர் வாங்கி, லட்சுமி என்று பெயர் சூட்டி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கி உள்ளனர். யானையை வரவேற்று அழைத்துச்சென்ற கோவில் நிர்வாகிகள், ஆண்டாள் யானைக்கு அருகிலேயே இடம் அளித்தனர்.