உளுந்தூர்பேட்டை: எறையூர் புனித ஜெப மாலை அன்னை ஆலய தேர் திருவிழா துவங்கியது.உளுந்தூர் பேட்டை அடுத்த எறையூர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் வரும் 30ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. அதனையொட்டி நேற்று முன் தினம் மாலை 6.45 மணிக்கு ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக தேர் வீதியுலா நடந்தது. நேற்று அதி காலை 4.30 மணி மற்றும் 6.30 மணிக்கும் சிறப்பு பிரார்த்னை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ரோசோரியா தலைமையில் ஊராட்சி தலைவர் ஆசிர்வாதம், ஒன்றிய கவுன்சிலர் சாராள் ஆரோக்கிய தாஸ் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.