சிவகாசி : விருதுநகர் மூளிப்பட்டி தவசிலிங்கசுவாமி கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு 48 வது நாள் மண்டல பூஜை நடந்தது.அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ கோயிலான இங்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா ஆக. 28ல் நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 48 வது நாளான நேற்று பூர்த்தி பூரண மண்டல பூஜை நடந்தது. விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி பூஜை, பூர்ணாஹதி மற்றும் மகாதீபாராதனை நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு பாலாபிஷேகம், திருநீரு , சந்தனம், இளநீர் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஸ்தபதி கருப்பசாமி, கோயில் தலைவர் செல்லசாமி, செயலாளர் தர்மலிங்கம் கலந்து கொண்டனர்.