பழநி: பழநி மலைக்கோயிலில் இந்தாண்டு நவராத்திரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழா நடைபெறும். இந்தாண்டு அக்., 17 முதல் 24 ம்தேதி வரை பழநி மலைக் கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் தினமும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். கொரோனா ஊரடங்கு தளர்விலும் சில நிலையான நடைமுறை அமலில் உள்ளதால், முக்கிய நிகழ்வுகளான காப்புக் கட்டுதல், சுவாமி புறப்பாடு, வில்அம்பு போடும் நிகழ்ச்சி இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான நித்ய பூஜைகள் விதிகளுக்குட்பட்டு நடைபெறும், என இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.