Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்! விருச்சிகம்: ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்! விருச்சிகம்: ஐப்பசி மாத பலனும் ...
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
துலாம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!
எழுத்தின் அளவு:
துலாம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:10


சித்திரை 3, 4ம் பாதம்:    
    மாத துவக்கத்தில் சாதக பலன்களைக் கண்டு வரும் நீங்கள் அக்.26 முதல் போராட்டமான சூழலைக் காண்பீர்கள். நாம் நல்லது செய்யப் போக அது மற்றவர் கண்களுக்குத் தவறாகத் தோன்றலாம். உங்கள் தனிப்பட்ட கருத்துக்களின் மூலம் இதுநாள் வரை நண்பர்களாக இருந்தவர்கள் கூட எதிராக செயல்படுவர். இறங்கிய செயல்களில் வெற்றி இழுபறியாக இருந்து வரும். எளிதில் கிடைத்து விடும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நற்பலன்கள் கிடைப்பதில் தடை குறுக்கிடும். ஆயினும் விடாமுயற்சியைக் கொண்டிருக்கும் நீங்கள் தாமதமானாலும் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் நிதானம் தேவை. செவ்வாய் உங்களின் மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் துணை நிற்பார். உடன்பிறந்தோரால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் பணிகளுக்கு மற்றொரு கரமாக துணை நிற்கும். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் படிப்பில் சற்று சிரமத்தை சந்திப்பர். உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பிள்ளைகளின் செயல்பாட்டால் கவுரவம் கூடும். அவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. ஆறாம் இடம் வலிமை பெற்றிருப்பதால் வீண்பிரச்னை வந்து சேரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன்தரும் வகையில் அமையும். தொழிலில் நேர்மையான செயல்பாடு நற்பெயர் பெற்றுத் தரும். பணியாளர்கள் சக ஊழியரை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.
பரிகாரம் : தினமும் ஐயப்பனை வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : நவ.2
.............
சுவாதி:
     மாதத்தின் துவக்கம் நல்லபடியாக அமைந்திருக்கும். அக்.23 முதல் பணிகளைச் செய்து முடிக்க அலைச்சலை சந்திக்க நேரிடும். ஒரு முறைக்கு இரு முறையாக முயற்சித்து எடுத்த பணியை செய்து முடிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும். தான் செய்வது மட்டுமே சரி என்று எண்ணாமல் அடுத்தவர்களின்  நியாயத்தை உணர்வது அவசியம். குடும்பத்தினருக்கான உழைக்கும் நீங்கள் அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டால் வீண் மனஸ்தாபம் காணாமல் போகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமுடன் செயல்பட்டால் இழப்பினைத் தவிர்க்க முடியும். வீண் பிரச்னைகள் வந்து சேரும் நேரம் என்பதால் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். போராட்ட குணம் அதிகரிக்கக் காண்பீர்கள். தனாதிபதியும் ஆறில் இருப்பதால் பணவிஷயத்தில் எச்சரிக்கை தேவை. கடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை தோன்றி மறையும். உங்கள் பேச்சு அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்படக்கூடும். உடன்பிறந்தோருக்கு உதவப் போய் சங்கடமான சூழலை எதிர்கொள்வீர்கள். முக்கியமான விஷயங்களை நேரில் அணுகுவது நல்லது. உறவினர்களால் மனக்கலக்கம் ஏற்படக் கூடும். வாகன பயணத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சகமாணவர்களின் பொறாமைக்கு ஆளாவர். ஆறாம் இடம் வலுப்பெறுவதால்  உடல்நிலையில் விழிப்புடன் இருக்கவும். சிறு பிரச்னையைக் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. வாழ்க்கைத்துணை இக்கட்டான சூழலில் பக்கபலமாக இருப்பார். வியாபாரிகள் தொழில்முறையில் போட்டியான சூழலை சந்திப்பர். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டிய மாதம் இது.
பரிகாரம் : சனியன்று சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : நவ.3

விசாகம் 1, 2, 3ம் பாதம் :
    இந்த மாதத்தில் ஈடுபட்ட பணிகள் நிதானமாக நடைபெறும். எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம். ராசிநாதனின் இடமாற்ற நிலை அக். 23 முதல் சிரமத்தை தரக்கூடும். . கடந்த சில மாதங்களாக அரசு தரப்பு பணிகளில் எளிதான வெற்றி பெற்றிருப்பீர்கள். இனி இடைஞ்சல்களை சந்தித்து வருவீர்கள். பின்னால் வருவதை முன்னரே கணிக்கும் திறன் உடைய நீங்கள் சூழ்நிலைக்குத் தக்கபடி மாறி கொள்வீர்கள். இக்கட்டான சூழலில் அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. குடும்பத்தில் பிரச்னைகள் தலையெடுக்கத் துவங்கும். பொருளாதாரத்தில் தடை உண்டாகும். உடன்பிறந்தோரின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் பயனளிக்கும்.  மாணவர்கள் சற்று தேக்க நிலைக்கு ஆளாவர்.  உறவினர்களால் வீண் கலகங்களை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். அவர்களது உடல்நிலையில் அக்டோபர் மாத இறுதியில் கவனம் செலுத்துவது அவசியம். கடன் பிரச்னைகள் சற்று தலை துாக்கும்.  இக்கட்டான சூழலில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன் தரும் வகையில் அமையும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். தொழிலில் போட்டி அதிகரிப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பணியாளர்கள் அதிகாரிகளிடம் நற்பெயர் காண  போராட வேண்டியிருக்கும் எதிலும் தடையைத் தாண்டி வெற்றி காண வேண்டிய நேரம் இது.
பரிகாரம் : அனுமன் வழிபாடு அல்லல் போக்கும்.
சந்திராஷ்டமம் : நவ.3, 4

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar