Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்! தனுசு : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் தனுசு : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
விருச்சிகம்: ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:10


விசாகம் 4ம் பாதம்:     ராசிநாதன் செவ்வாய், நட்சத்திர அதிபதி குரு பலத்தால் நன்மை காண்பீர்கள். பேச்சுத் திறமையால் சாதனை புரிவீர்கள். முக்கிய உரையாடலின் போது புள்ளி விபரங்களைத் தவறாக குறிப்பிட்டாலும் மற்றவருக்கு தெரியாது. நினைத்ததை செய்து முடிப்பதில் வேகம் காட்டி வருவீர்கள். கவுரவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் நீங்கள் உங்களைச் சார்ந்து இருப்பவர்களோடு அனுசரணையோடு நடப்பது நல்லது. செவ்வாய் பேச்சுத்திறனை அதிகரிக்கச் செய்து வெற்றிக்குத் துணை புரியும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இருக்கும். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு குடும்பப் பிரச்னைகளில் தீர்வு காண்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க நன்மை காண்பீர்கள். பிரயாணத்தின் போது உண்டாகும் சந்திப்பால் நட்பு வட்டம் விரிவடையும். ஞாபக மறதி காரணமாக மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாவர். உறவினரால் கூடுதல் செலவுக்கு ஆளாக நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் உங்களின் விருப்பத்திற்கு மாறாக அமையக்கூடும். கற்பனை  எண்ணங்களை நடைமுறைப்படுத்த முயற்சிப்பீர்கள். முதுகு வலி, மூட்டு வலி பிரச்னையால் சிரமப்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயனுள்ள வகையில் இருக்கும். பணியாளர்களுக்கு அலுவல் பணியில் கவனம் தேவை. குறிப்பாக கோப்புகளை பாதுகாப்பதில் கவனம் தேவை.
பரிகாரம் : செவ்வாய்கிழமையில் அன்னதானம் செய்யுங்கள்.
சந்திராஷ்டம நாள் : நவ. 4

அனுஷம் :      கிரக நிலை சாதகமான பலனைத் தரும்.  ராசிநாதனின் ஆட்சிபெற்ற நிலையும், நட்சத்திர அதிபதி சனியின் சஞ்சாரமும் எளிதான வெற்றியைப் பெற்றுத் தரும். ஏழரை சனியின் தாக்கம் குறைய தொடங்குவதை உணர்வீர்கள். பணவரவு  சிறப்பாக இருக்கும். எதிர்கால நன்மை கருதி சேமிப்பில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடு தோன்றக்கூடும். பேச்சில் விவேகம் நிறைந்த கருத்து வெளிப்படும். சுவையான உணவுகளை ருசிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். உடல்நிலையை கருத்தில் கொண்டு உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. சகோதரர் வீட்டு விசேஷங்களில் முன்நின்று செயல்பட வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் முன்னேற்றம் பெற எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவதுடன் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படலாம்.  குடும்ப விவகாரங்களை யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வாகன வகையில் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல் வருத்தத்தை தோற்றுவிக்கலாம். மனைவியின் செயல்களுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண்செலவுக்கு ஆளாக வாய்ப்புண்டு. பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை பேச்சு நடக்கும். கூட்டுத்தொழில் லாபத்தைப் பெற்றுத் தரும்.
பரிகாரம் : மகாவிஷ்ணு வழிபாடு நலம் தரும்.
சந்திராஷ்டம நாள் : நவ. 5

கேட்டை :     ராசிநாதன் செவ்வாய், நட்சத்திர அதிபதி புதன் ஆகியோரின் சாதகமான சஞ்சாரம் சிறப்பாக செயல்படவைக்கும். நீண்ட நாளாக  திட்டமிட்ட பணிகளை செயல்படுத்த காலம் சாதகமாக அமையும். செயலில் வெற்றியோடு லாபமும் காண்பீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசி நற்பெயர் காண்பீர்கள். அதே நேரத்தில்  நகைச்சுவையாக பேசி சிலரின் மனதினைப் புண்படுத்தக்கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. நான்கு பேர் மத்தியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்புவீ்ர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும்.  உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ச்சிக்கு துணை நிற்கும். தாயார் வழி உறவினரால் தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரலாம்.  வாகனங்களால் திடீர் செலவு கூடும். மாணவர்கள் பாடங்களை அடிக்கடி எழுதிப்பார்ப்பது நல்லது. பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் செயல்பாடு உங்களுக்கு துணைபுரியும் வகையில் அமையும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.  பணியாளர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பை பெறுவர். ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு நற்பலன் தரும்.
சந்திராஷ்டம நாள் : நவ.5, 6

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar