ஈரோடு:பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்புக்காக நடப்பாண்டு கவுந்தப்பாடியில் 500 டன் நாட்டு சர்க்கரை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பழநி கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:பழனி பஞ்சாமிர்தத்தின் புகழ் பெற்ற சுவைக்கு முக்கிய காரணமாக நாட்டு சர்க்கரை விளங்குகிறது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் நாட்டு சர்க்கரை வாங்கப்பட்டது.கடந்த ஆறு ஆண்டுகளாக கவுந்தப்பாடியில் இருந்து நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்படவில்லை. நடப்பாண்டு 500 டன் வரை நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பழநி பஞ்சாமிர்தம் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும், என்றார்.