மவுனகுரு சுவாமி கோயிலில் பாலாபிஷேகத்துடன் நடந்த குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2020 11:10
கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 1008 படி பாலாபிஷேகத்துடன் குருபூஜை நடந்தது. ஐப்பசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும் குருபூஜை இந்தாண்டு நேற்று முன்தினம் துவங்கியது. பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தீர்த்த, பால் கலசங்களுடன் கிராம விளையாடல் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தாபிேஷகம் நடந்தது. நேற்று, மகா யாகத்துடன் குரு பூஜை நடந்தது. சமூக இடைவெளி, முக கவச கட்டுப்பாடுகளுடன், சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம் நடந்தது. வடமாநில சாதுக்கள், தீர்த்தாபிேஷகம், குருபூஜையில் பங்கேற்றனர். மவுனகுரு சுவாமிகள் டிரஸ்ட் ஏற்பாடுகளை செய்திருந்தது.