ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வளாகத்திலுள்ள மணவாள மாமுனிகள் சன்னிதியில் 650 வது திருநட்சத்திர உற்ஸவம், சடகோபராமானுஜ ஜீயர் தலைமையில் நடந்தது. மணவாளமாமுனிக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்ட ஆண்டாள் மற்றும் வடபத்ரசயனர் சன்னிதியில் மங்களாசாசனம் நடந்தது. தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ உடுமலைராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,சந்திரபிரபா, நிலவள வங்கி தலைவர் முத்தையா, தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் இளங்கோவன் தரிசனம் செய்தனர்.