பதிவு செய்த நாள்
23
அக்
2020
04:10
திருப்பூர், : சிவன்மலை கோவில் உண்டியலில், முருக பக்தர்கள், 17 லட்சத்து, 22 ஆயிரத்து, 451 ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காங்கயம், சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவிலில், 11 நிரந்தர உண்டியல் உள்ளன. கோவிலின் உதவி கமிஷனர் முல்லை, திருப்பூர் அய்யம்பாளையம் வாழை தோட்டத்து அய்யன் கோவில் உதவி ஆணையர் மேனகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், மொத்தம், 17 லட்சத்து, 22 ஆயிரத்து, 451 ரூபாய், 35 கிராம் தங்கம், 286 கிராம் வெள்ளி ஆகியவற்றை, பக்தர்ள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.