பாலக்காடு: ஆளும் ஆரவவுமின்றி வேதமந்திரங்களும் நாமஜபகோஷங்கள் மட்டுமாக பக்திப் பரவசத்துடன் கல்பாத்தி தேர் திருவிழாவிற்கு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில். இங்கு எல்லா ஐப்பசி மாதம் இறுதியில் தேர்த் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர்த்திருவிழா கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கோவில்களில் சடங்காக மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி இன்று தேர்த்திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தனர்.
விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று காலையில் 10.30 மணி அளவிலும் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், மந்தக்கரை மகா கணபதி, சாத்தபுரம் பிரசன்ன மஹாகணபதி ஆகிய உப கோவில்களிலும் 11 மணி அளவிலும் கொடியேற்றம் நடந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பொதுவாக கொடியேற்றம் காண நூறுக்கும் மேலான பங்கேற்றிருந்தனர். ஆனால் இம்முறை கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தந்திரிகளும் கோவில் நிர்வாகத்தினரும் பிராமண சமூக பிரதிநிதிகளும் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். வருகிற 13, 14, 15 தேதிகளில் ரத உற்சவம் நடக்கும். 16ம் தேதி துவஜாவரோகணம் நடைபெறும். நாளை முதல் எல்லா நாட்களிலும் காலை வேதபாராயணம் நடைபெறும். கட்டுப்பாடு அமலில் உள்ளதால் விழா கோவில்களில் சடங்குகளாக மட்டுமே நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.