சோழவந்தான் : குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நவ.,13ல் லட்சார்ச்சனை துவங்குகிறது.
நவ.,15 இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பகவான் இடபெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிகாரர்களுக்கும் பரிகார பூஜையாக நவ.,13 காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, நவ.,14ம் தேதி இரவு 7.00 மணிக்கு முடிகிறது. குருபெயர்ச்சியை முன்னிட்டு, வரும் 15ம் தேதி ஞாயிறு இரவு 7.48 மணி முதல் 9.48 வரை பரிஹார மஹாயாஹம், திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.